spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

விருதுநகர் கல் குவாரி விபத்து தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

விருதுநகர் கல் குவாரி விபத்து தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அதிமுகப் பொதுச்செயாலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி ஆவியூரில் கல் குவாரி குடோன் வெடித்து சிதறி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாமல் வெடி பொருட்களை நகர்த்தியதே விபத்திற்கு காரணம் என செய்திகள் வருகின்றன. கடந்த சில வருடங்களில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் 93 பேர் உயிரிழந்ததாக சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

தொடர்ச்சியான விபத்துகள் நடந்தும் இந்த விடியா திமுக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இதுபோன்ற தொடர் விபத்துகளும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்புகளும். வெடிபொருள் விபத்துகளை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத பொம்மை முதல்வர் திரு. @mkstalin அவர்கள் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும், இவ்விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img