spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வட தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் – எச்சரிக்கை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

வட தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 03.05.2024 முதல் 06.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

08.05.2024 மற்றும் 09.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  03.05.2024 முதல் 07.05.2024 வரை : அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். 03.05.2024 முதல் 07.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 03.05.2024 & 04.05.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

03.05.2024 & 04.05.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 05.05.2024 & 06.05.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Video thumbnail
வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு| திமுக & அதிமுக 2 கட்சிகளுக்கும் இடையில் உள்ள பெரிய வேறுபாடு DMK ADMK
13:57
Video thumbnail
"விசில் பட்டனை அழுத்துங்க" | Gen Z நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் | TVK Vijay | தவெக |Election
19:45
Video thumbnail
TVK VIJAY | த.வெ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு | Tamilaga Vettri Kazhagam
55:22
Video thumbnail
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு | DMK Candidate List | CM MK Stalin | TN Election
14:43
Video thumbnail
அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் டிடிவி தினகரன்
02:16
Video thumbnail
சசிகலாவை சந்தித்து நடிகர் கார்த்திக் திடீர் ஆலோசனை!
00:41
Video thumbnail
முட்டாள்களின் ஒட்டு மொத்த கூடாரம் தவெக.. #tvk #vijay
01:11
Video thumbnail
என் கணவரை விட, விஜய் மாமாவை தான் ரொம்ப புடிக்கும் #tvk #dmk #vijay
01:39
Video thumbnail
"கட்சியில் இருந்து ஒரு பெண் வெளிய வந்தா இப்படி தான் பேசுவீங்களா?" - ரஞ்சனா நாச்சியார் புகார் TVK
03:19
Video thumbnail
பொன்ராஜ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்த விஜய்.. முட்டாள்களின் ஒட்டு மொத்த கூடாரம் தவெக |TVK
12:06
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img