spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் – வானிலை மையம் எச்சரிக்கை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, 04.05.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 05.05.2024 மற்றும் 06.05.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

08.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர் மாவட்டஙகள், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 09.05.2024 மற்றும் 10.05.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

04.05.2024 முதல் 08.05.2024 வரை: அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

04.05.2024 முதல் 08.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 04.05.2024 & 05.05.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும். 04.05.2024 முதல் 08.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°–43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°–40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

Video thumbnail
குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பரிசுப் பெட்டகங்களை அமைச்சர் ஆனந்த் வழங்கினார்.
01:34
Video thumbnail
"இதனால் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.." அமைச்சர் அருண்ராஜ்
01:44
Video thumbnail
இனி நல்லதே நடக்கும் - பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பின் அன்புமணி பேட்டி
00:34
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஹன்சிகா வழிபாடு
01:39
Video thumbnail
பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார் அன்புமணி..
02:14
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு இல்லை.. - அமைச்சர் ரமேஷ்
01:34
Video thumbnail
"திரும்பவும் ரஜினி சாருடன் படம்.. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த கமல் சாருக்கு நன்றி”- நடிகை சிம்ரன்
01:34
Video thumbnail
40 வருஷத்துக்கு முன்ன நாங்க எடுத்த முடிவு.. ரஜினி குறித்து மேடையில் சொன்ன கமல்
02:03
Video thumbnail
பணி நியமன ஆணை பெற்றவர்களுடன் அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்.!
01:16
Video thumbnail
"கமல் செஞ்ச உதவிக்கு.." ரஜினி சொன்ன உண்மை நிகழ்வு..
02:03
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img