வறட்சியான நேரத்தில் ஓய்வு எடுப்பதற்கு முதலமைச்சர் செல்வதா? – ஈபிஎஸ் கேள்வி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வறட்சியான நேரத்தில் ஓய்வு எடுப்பதற்கு முதலமைச்சர் செல்வதா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்காடு பேருந்து விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பேசிய அவர் , தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன; புதிய பேருந்துகள் வாங்குவதாக திமுக ஆட்சியில் பொய் கூறுகின்றனர்; சென்னையில் மின்சார பேருந்துகளுக்கு அதிமுக ஆட்சியில் ஜெர்மனியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது; அதிமுக ஆட்சியில்தான் 14,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. அரசு பேருந்துகளில் பயணிகள் மிகுந்த அச்சத்துடனே பயணித்து வருகின்றனர். ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் தமிழ்நாடு அரசு நிவாரணமாக வழங்க வேண்டும்.

சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும். நான் ரகசிய பயணம் எதுவும் நான் மேற்கொள்ளவில்லை. அதிக நேரம் நிற்பதால் குதிகாலில் வலி ஏற்பட்டது. ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றிருந்தேன். வறட்சியான நேரத்தில் ஓய்வு எடுப்பதற்கு முதலமைச்சர் செல்வதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img