இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் அதுல் குமார் மறைவு – முத்தரசன் இரங்கல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் அதுல் குமார் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், விவசாயிகள் இயக்கத்தின் நாடறிந்த தலைவருமான அதுல் குமார் அஞ்சான் (71) உடல் நலக்குறைவால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறோம். தொழிலாளர் மற்றும் விவசாயிகள் வர்க்க கூட்டணி மூலம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க சமரசம் இல்லாமல் போராடி வந்த களப்போராளியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இழந்து நிற்கிறது.

அவரது மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மேலும், அர்ப்பணி உணர்வோடு, தன்னலமற்ற பொது வாழ்க்கை வாழ்ந்து காட்டிய அதுல் குமார் அஞ்சான் மறைவுக்கு (சிபிஐ) மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி செவ்வணக்கம் செலுத்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சி தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறது. அதுல் குமார் அஞ்சான் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் கட்சி கொடிகள் மூன்று நாட்கள் அரைக்கம்பத்தில் இறக்கி விடுமாறு கட்சி அமைப்புகளை கேட்டுக்கொள்கிறது. எனக் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக | திமுக கூட்டணி 180- 200 தொகுதிகள் வெற்றி
12:14
Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img