spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமை ஆகும் – பிரேமலாதா விஜயகாந்த்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் தலையாய கடமை ஆகும் என தேமுதிகப் பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் பயிரிடும் அனைத்து வகையான கரும்பு, வாழை, தென்னை, நெற்பயிர்கள் போன்றவை பலத்த காற்றால் சேதம் அடைவது, தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மிகப்பெரிய கவலையையும், வேதனையையும் கொடுத்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசு உடனடியாக உதவித் தொகையை வழங்கவேண்டும். அதேபோல் தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்கள் இருக்கும் இடங்களுக்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் இழப்புகளுக்கு ஏற்ப அரசு உடனடியாக உதவித் தொகையை வழங்கி, விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் தலையாய கடமை ஆகும்.

மேலும் மூன்று ஆண்டுகால ஆட்சியிலே மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லும் தமிழக முதல்வர் அவர்கள், பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்கு உடனடியாக உதவியை செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். “ஏழையின் சிரிப்பில் தான் இறைவனை காண முடியும்” என்ற பழமொழிக்கேற்ப ஏழை விவசாய மக்களின் முகத்தில் உண்மையான மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Video thumbnail
அரசியல் நாகரீகம் | முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய் | CM Vijay
13:03
Video thumbnail
முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்..
00:53
Video thumbnail
சபாநாயகர் தேர்தலில் போட்டியிட தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகர் வேட்புமனு தாக்கல்
00:18
Video thumbnail
எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ வாக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி
00:48
Video thumbnail
சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்று கொண்டார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
00:51
Video thumbnail
சட்டப்பேரவைக்கு முன் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்றார் உதயநிதி
00:46
Video thumbnail
முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக சட்டமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டார்
00:54
Video thumbnail
மு.க.ஸ்டாலின் அந்த தைரியம்...
01:29
Video thumbnail
பதவியேற்பு விழாவில் அதிர்ச்சி தந்த மாற்றம்
01:16
Video thumbnail
திமுகவை இப்போது ஆதரிப்பது ஏன்?
01:37
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img