பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம் மறைவு – முதலமைச்சர் இரங்கல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வேலாயுதம் அவர்கள் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி. பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வேலாயுதம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக வேறுபாடுகளின்றி இருந்தாலும், கட்சி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர் பழகுதற்கினிய உள்ளம் கொண்டவர் அவர். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர். அவரது இல்ல நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று வாழ்த்திய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img