சென்னையில் கடந்த 7 நாட்களில் திருட்டு வழக்கில் தொடர்புடைய 56 பேர் கைது!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான 40 வழக்குகளில் தொடர்புடைய 56 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகரில் வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய (DACO-Drive Against Crime Offendors) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வாகனங்கள் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 02.05.2024 முதல் 08.05.2024 வரையிலான 7 நாட்களில் செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு தொடர்பான 30 வழக்குகளில் தொடர்புடைய 1 இளஞ்சிறார் உட்பட 45 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 42,75 சவரன் தங்க நகைகள், 11 செல்போன்கள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ.1,00,730/-, 47 கிலோ இரும்பு பொருட்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கடந்த 7 நாட்களில் மோட்டார் வாகன திருட்டு தொடர்பான 10 வழக்குகளில் தொடர்புடைய 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரொக்கம் ரூ.46,000/- பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 08.05.2024 வரை, திருட்டு. சங்கிலி பறிப்பு மற்றும் வழிப்பறி குற்றங்களில் கைது செய்யப்பட்ட 77 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர். இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு. தங்கச்சங்கிலி பறிப்பு மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

 

Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
Video thumbnail
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பி ஓடிய இருவர்..
01:32
Video thumbnail
உலகம், மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறது
00:52
Video thumbnail
இஸ்ரேல் - ஈரான் போர் | மூன்றாம் உலகப்போர் வருகிறது | போர் நிறுத்தம் வேண்டும் | Iran-Israel War
10:47
Video thumbnail
பெரியார் மண்ணில் பாஜகவின் மதவேஷம் எடுபடாது
00:54
Video thumbnail
முருகன் மாநாடு - ஆன்மிகமா? அரசியலா?
01:00
Video thumbnail
இந்து அமைப்புகள் இந்துக்களுக்கு செய்த நன்மைகள்?
00:57
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img