spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

குடிபோதையில் தகராறு – ஒருவர் பலி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

குடிபோதையில் தகராறு – ஒருவர் பலி

குன்றத்தூர் அருகே சாலையோரத்தில் குடிபோதையில் படுத்திருந்த நபரிடம் தகராறு தலையில் கட்டையால் தாக்கியதில் ஒருவர் பலி.

குடிபோதையில் தகராறு - ஒருவர் பலி

 

குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் சாலை ஓரத்தில் சிலர் தாக்கி கொள்வதாக வந்த தகவலையடுத்து ரோந்து பணியில் இருந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாலையோரத்தில் படுத்திருந்த நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் குன்றத்தூர் அடுத்த சின்னபனிச்சேரி பகுதியை சேர்ந்த யுவராஜ்(35), என்பதும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

குடிபோதையில் தகராறு - ஒருவர் பலி

நேற்று இரவு குடிபோதையில் சம்பவம் நடந்த இடத்தில் சாலை ஓரத்தில் படுத்திருந்தபோது கோவூரை சேர்ந்த கணேஷ் என்பவர் குடிபோதையில் அங்கு வந்த போது யுவராஜ் படுத்திருப்பதை பார்த்து அவரிடம் தகராறு செய்த நிலையில் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டதாகவும் பின்னர் போதையில் வந்த கணேசின் நண்பர்கள் யுவராஜை சரமாரியாக கல்லாலும், கட்டையாலும் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரிய வந்தது.

https://www.mugavari.in/news/tamilnadu-news/world-record-of-a-4-year-old-boy/3074

இதையடுத்து கணேசனை மாங்காடு போலீசார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவத்தில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் சாலையோரத்தில் படுத்திருந்தபோது ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video thumbnail
மொத்த இந்தியாவுடன் தான் எனது கூட்டணி; கூட்டணியை விட எனக்கு கொள்கைதான் முக்கியம் - எம்.பி.கமல்ஹாசன்
01:13
Video thumbnail
தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பியில் மோதியதில் தீப்பிடித்தது
00:31
Video thumbnail
திராவிட மாடல் கழகத்தை மீண்டும் இளைஞர்களிடம் ஒப்படைக்க இளைஞரணியை தொடங்கியுள்ளோம்: மு.க.ஸ்டாலின்
01:57
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை மீனாட்சி சௌத்ரி சாமி தரிசனம்
01:07
Video thumbnail
மாமேதை கார்ல் மார்க்ஸின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
00:51
Video thumbnail
என்.எஸ்.கிருஷ்ணனின் புதுப்பிக்கப்பட்ட சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:52
Video thumbnail
லிப்ட் உள்ளே ஹீலியம் பலூன்கள் வெடித்து தீ விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய மூவர்
00:25
Video thumbnail
தூய்மை பணியாளர் பத்மாவுக்கு காலணிகள் அணிவித்து காலில் விழுந்து வணங்கிய நடிகர் பார்த்திபன்
00:47
Video thumbnail
'வித் லவ்' படத்தின் Pre Release-க்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
00:28
Video thumbnail
"திமுகவை வீழ்த்த TVK-வால் மட்டும்தான் முடியும்" - தவெக தலைவர் விஜய்
01:06
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img