சென்னை மெட்ரோ ரயில் திட்டம்; முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்; முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டில் முதல்கட்ட மெட்ரோரயில் திட்ட சேவைகள் தொடங்கப்பட்டன. தற்போது சென்னை சென்ட்ரலிலில் இருந்து பரங்கிமலை வரையும், விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட பணி கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன்படி மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்த நிலையில் . இந்த சூழலில், டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 27-ம் தேதி சந்தித்தார். சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட பணிகளுக்காக மத்திய அரசின் நிதியை வழங்க கோரி மனு அளித்திருந்தாா். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் எழுதிய கடிதமொன்றில், “சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட பணிக்கு மத்திய அரசு 50 சதவீதம் பங்களிப்பை வழங்க வேண்டும்” என்று கோரினார். இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார துறையின் பரிந்துரைப்படி சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி சென்னையில் 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. ரூ.63,246 கோடி மதிப்பிலான இந்த திட்டம்2027-ம் ஆண்டில் நிறைவடையும். இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img