spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அம்பத்தூர் அருகே தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கான சிறப்பு பூஜை – நடிகர் தாடி பாலாஜி பேட்டி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அம்பத்தூர் அருகே தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கான சிறப்பு பூஜை – நடிகர் தாடி பாலாஜி பேட்டி.அம்பத்தூர் பகுதி முகப்பேர் அருகே பெருமாள் கோவிலில் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கான சிறப்பு பூஜை. நடிகர் தாடி பாலாஜி பேட்டி.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக் 27ல் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் மாநாட்டிற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் தவெக முதல் மாநாடு வெற்றி பெற வேண்டி சென்னை கிழக்கு மாவட்டம் தலைவர் பால முருகன் தலைமையில் அம்பத்தூர் அடுத்த முகப்பேர் சந்தன சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர்.

இதில் நடிகர் தாடி பாலாஜி கலந்து கொண்டு வழிப்பட்டப்பின் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் தாடி பாலாஜி, புரட்டாசி சனிக்கிழமையையொட்டி தமிழக வெற்றி கழக கிழக்கு மாவட்டம் சார்பில் மாநாடு வெற்றி பெற சிறப்பு பூஜை நடைபெற்றது.

நேற்று தளபதி படத்திற்கான பூஜை இன்று மாநாட்டின் தலைவர் தளபதிக்காக நடைபெறும் பூஜையில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் மாநாட்டிற்காக என்னை பணியாற்ற கூறி எனக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். நடிகராக அவருடன் பணியாற்றியுள்ளேன், ஆனால் கட்சியில் தற்போது தொண்டர்களுடன் சேர்ந்து பணியாற்றி தலைவர் எதிர்ப்பார்ப்பதை செய்து முடிப்பேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து விஜயின் கடைசி படம் இது தான் என்பதை தண்ணீரில் தான் எழுத வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனத்திற்கு பாண்டிசேரியில் இருந்ததால் தண்ணீரில் எழுத வேண்டும் என கூறுகிறார்கள் என்று பதிலளித்தாா். ஒருவர் வந்து பணி செய்வதற்கு முன்பே பேசுகிறார்கள், அதுவே எங்களுக்கு வெற்றி தான். அவர் வந்து என்ன செய்கிறார் என 2027ல் பார்த்துவிட்டு பின் பேசட்டும் என தெரிவித்தார்.

இந்த கட்சியில் பணியாற்றிவது ஒரே ஒரு முகத்திற்காக தான் அது தளபதி விஜய் அவர்களுக்கு தான்.. முதல் கட்சியின் மாநாட்டிற்கு ராணுவ கட்டுப்பாடுடன் எந்த கட்சியும் நடந்ததில்லை, முதல் மாநாட்டிற்கே கட்சி தலைவர் அறிவுறுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img