சி.பி.ஐ போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் 50 லட்சம் மோசடி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சி.பி.ஐ போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் 50 லட்சம் மோசடி

சி.பி.ஐ போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் செல்போனில் பேசி 50 லட்சம் ஏமாற்றிய 4 இளைஞர்களை தாம்பரம் காவல் ஆணைய குற்றப்பிரிவு போலீசார் கேரளாவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சி.பி.ஐ போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் 50 லட்சம் மோசடி

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ்குமார்(52). இவரின் செல்போனுக்கு கடந்த இரண்டு மாதம் முன்பாக மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு குழு (TRAI) இல் இருந்து பேசுவதாக கூறி இளைஞர் ஒருவர் 720754022 என்கிற செல்போன் என்னில் பேசியுள்ளனர்.

செல்போன் என் யார் பெயரில் உள்ளது. இந்த செல்போனில் இருந்து பெண்களை கொடுமை படுத்தும் விதமாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இது சம்மந்தமாக மும்பை போலீஸ் SKYPE விடியோ காணெளியில் உங்களை விசாரிக்க வேண்டும், அதுபோல் சி.பி.ஐ போலீசில் பண மோசடி நபர்களுடன் உங்களுக்கு தொடர்பு உள்ளது என அச்சப்படும் விதமாக இந்தி, ஆங்கிலத்தில் மிரட்டி பேசியுள்ளனர்.

 

https://www.mugavari.in/owner-incident-of-the-farm-house/

மேலும் உடனடியாக 50 லட்சத்தை குறிப்பிடும் வங்கி கணக்கிற்கு அனுப்பவும் பின்னர் நேரில் விசாரிக்கும் போது நிரபராதி என்றால் திரும்ப பெற்றுக்கொள்ளூங்கள் என கூறியதன் பேரில் சுரேஷ்குமார் 50 லட்சம் பணத்தை அனுப்பிவிட்டார்.

ஆனால் மேற்கொண்டு விசாரணைக்கு அழைக்கவில்லை செல்போனும் அணைக்கப்பட்டதால் தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்த சுரேஷ்குமார் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கிகளின் துணையுடன் கேரளா மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்ரிட்(25) என்பவரின் வங்கி கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தெரிந்து அவரின் நண்பர்கள் விக்னேஷ்(35), முனிஸ்(34), பசூல் ரஹ்மான்(20) 4 கேரளா இளைஞர்களையும் கைது செய்து சென்னை அழைத்துவந்து விசாரணை செய்த நிலையில் சி.பி.ஐ போலீஸ் போன்று மக்கள் அறியாத மத்திய துறையின் பெயர்களை பயன்படுத்தி பணம் பறித்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் நிதிமன்ற உத்திரவின் படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சி.பி.ஐ போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் 50 லட்சம் மோசடி

மேலும் காவல் துறையில் இதுபோல் சி.பி.ஐ போலீஸ், பகுதி நேரவேலை, டெலிகிராம் டாஸ்க் போன்ற அறிவிப்புகளையும், குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதுபோல் தொல்லை கொடுத்தால் 1930 எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்தனர்.

Video thumbnail
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | உதயநிதிக்கு புதிய பொறுப்பு | அதிமுகவுடன் தவெக சேருமா? | DMK |ADMK
14:43
Video thumbnail
2026 தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் - திருமாவளவன்
04:28
Video thumbnail
மே தினத்தின் வரலாறு | May Day | Karl Marx
00:53
Video thumbnail
யார் இந்த சிங்காரவேலர் | Singaravelar | May Day
00:52
Video thumbnail
இந்தியாவில் முதல் மே தினம் எங்கு கொண்டாடப்பட்டது May Day
00:37
Video thumbnail
மே தினத்தின் வரலாறு | தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி பெற்ற ஒரு விடுமுறை நாள் | May Day | Mugavari News
07:07
Video thumbnail
சுயமரியாதை இயக்கத்தால் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு
00:43
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img