spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

rain

தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 31.03.2024: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 01.04.2024 மற்றும் 02.04.2024: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

03.04.2024: தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 04.04.2024 முதல் 06.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 31.03.2024 முதல் 04.04.2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Video thumbnail
"அஜித் வெளியே வந்தால்கூட ரசிகர் பட்டாளம் கூடும்; – திருமாவளவன்."
01:03
Video thumbnail
"எடப்பாடி, அன்புமணி, தினகரன் ஆகியோரை மிரட்டி கூட்டணியில் வைத்திருக்கிறது பாஜக – திருமாவளவன்"
02:06
Video thumbnail
தமிழ்நாட்டில் அதிமுக அழிந்துவிட்டது.. இப்போது இருப்பது பாஜகவின் முகமூடி" - ராகுல்காந்தி
25:30
Video thumbnail
விசில் கோலம் போட்ட விஜய்; பெரம்பூர் தொகுதியில் சர்ப்ரைஸ் விசிட்!
00:32
Video thumbnail
தொகுதி மறு சீரமைப்பைக் கண்டித்து மதுரவாயலில் தொகுதி அயப்பாக்கத்தில் திமுகவினர் போராட்டம்
01:14
Video thumbnail
தொகுதி மறுவரையறை மசோதா: நாசர் எரித்து எதிர்ப்பு #Avadi #DMK #Nasar
00:50
Video thumbnail
நெருப்பை பற்ற வைத்த ஸ்டாலின் | அதிரும் ஒன்றிய அரசு... தொகுதி மறுசீரமைப்பு என்னாகும்? | MK Stalin
09:47
Video thumbnail
மோடியை எச்சரித்த ஸ்டாலின்..
01:12
Video thumbnail
தியாகராய நகரில் பேசாமல் பிரச்சாரம் முடித்த விஜய்.. தவெக தொண்டர்கள் விஜயை பார்ப்பதற்காக ஓடி வந்தனர்
00:47
Video thumbnail
விஜய் பிரச்சார வாகன முன், இரு கைகள் விடுத்து ஆபத்தாக பைக் ஓட்டிய தவெக தொண்டர்.
00:56
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img