spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தமிழகத்தில் மூடும் நிலையில் உள்ள 18 தமிழ்வழிப் பள்ளிகள்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழகத்தில் மூடும் நிலையில் உள்ள 18 தமிழ்வழிப் பள்ளிகள்

தமிழகத்தில் மூடும் நிலையில் உள்ள 18 தமிழ்வழிப் பள்ளிகளை முதலமைச்சர் பாதுகாத்திட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை அடுத்த மேடவாக்கத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குடுபத்தினர் நடத்திவரும் திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளியின் 33 வது ஆண்டுவிழா இன்று நடைபெற்றது.

இதில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ, திரைப்பட இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துக்கொண்டனர்.

திரைப்பட இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி

முதலில் திருவள்ளுவரின் திரு உருவ சிலைக்கு மறியாதை செய்து துவக்கப்பட்ட நிகழ்ச்சியில், பறையாட்டம், தமிழ் பாடலுக்கு மாணவி ஒருவர் பரதநாட்டியம் ஆடினார்.

அதனை தொடந்து பள்ளி மாணவர்களின் சிலம்பம், ஈட்டி, கத்தி உள்ளிட்ட அவர்களின் விளையாட்டு பயிற்சியை வெளிப்படுத்தினார். அதனையடுத்து அந்த பள்ளியின் சிறப்பான தனித்தமிழ் முறையில் சிறிதும் வேற்று மொழி கலப்பில்லாமல் மாணவர்கள் பேசினார்கள்.

குறிபாக திருக்குரலில் உள்ள அதிகாரங்களில் மாணவர்கள் மாறி மாறி உற்சாக குரலை சொல்லி அதன் பொருட்களை எடுத்துரைத்தது அனைவரையும் கவர்ந்தது. அப்போது மாணவர்களுக்கு பரிசளிப்பு நடைபெற்று.

 

பறையாட்டம்

அப்போது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இதுபோல் தமிழ்வழி பள்ளிகள் நடத்தி மொழிக்கும் இனத்திற்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குடும்பத்தினர் பாடுபடுகிறார்கள். தமிழ்நாட்டில் தனித்தமிழ் தமிழ்வழிப்பள்ளிகள் 70 இருந்த நிலையில் தற்போது 18 ஆக உள்ளது. அரசு பள்ளிக்கு எந்தவித உதவிகள் செய்யப்படுகிறதோ அதேபோல் தாய்மொழி தமிழ் வழி பள்ளி நடக்கிற பள்ளிகளை மூடப்படாமல் தமிழக முதலமைச்சர் தொடந்து நடத்த முன்வர வேண்டும் என வேல்முருகன் கோரிக்கை வைத்தார்.

தற்போது எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு தமிழ் படிக்கமலேயே பட்டம் பெறமுடியும் என்கிற நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது.

உலகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகள் இருக்கிறது. அந்த படபிரிவுகளை தேர்வு செய்து பெற்றோர்கள் அவர் அவர் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். ஆனால் தாய் மொழி கலப்பில்லாமல் இருக்கவும் மொழி, இனம் காக்கவும் இதுபோல் இருக்கும் தமிழ்வழி கல்வியை முறையையும் மாநில அரசு காத்திட வேண்டும் என வேல்முருகன் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

மாநில அரசு காத்திட வேண்டும் என வேல்முருகன் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

முன்னதாக பேசிய இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி, பள்ளி பேருந்து ஓட்டுனரிடம் தன் எண்ணங்களை வெளிப்படுதும் கதையை மைய்யமாக வைத்து படம் எடுத்துவருகிறேன்.

மாணவர்களுக்கு வீட்டிலும், பள்ளியிலும் மனதில் தோன்றுவதை கேள்வியாக கேட்டால் அழுத்தபடுகிறார்கள் அவர்கள் எண்ணதை புரிந்து கொள்வதே என் அடுத்த படமாக தயாராகிவருகிறது.

https://www.mugavari.in/minister-udhayanidhi-stalin-campaign/

எனக்கு கார் உள்ளிட்ட வாழ்க்கை அளித்த தமிழ் சமுகத்திற்கு நல்ல படைப்புகளை அளிக்க முயல்கிறேன். இதற்காக தெலுங்கு படங்களில் கூட வில்லனாக நடித்து பணம் சேர்த்து படம் தாயாரித்து வழங்கவுள்ளேன். பெற்றோர், மூத்தவர்களை மாற்ற முடியாது அதனால் தான் குழந்தைகளிடம் ஜாதி, மதம் வேண்டாம் என கூறுகிறேன் அவர்களிடம் புரிதல் உள்ளது என நினைக்கிறேன் என்றார்.

ஆசிரியர்கள் படித்த படிப்போடு நிற்காமல் மாணவர்களிடம் எழும் கேள்விகளுக்கும் அவர்களுடன் சேர்ந்து படித்து தெரிவிக்க வேண்டும். இதுபோல் தமிழ் வழியில் புரிந்து படித்தவர்களால் தான் சாதனையாளர்களாக முடியும் என கூறினார்.

Video thumbnail
விழுப்புரம்: அரசு பேருந்து நடத்துனர் மீது மது போதையில் தாக்குதல்
00:37
Video thumbnail
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்
00:57
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்
00:36
Video thumbnail
"ஆளுநரின் செயல் வருத்தமளிக்கிறது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேச்சு
01:35
Video thumbnail
தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு
00:48
Video thumbnail
ஆந்திரா: பெண் காவலர் ஜெயாவுக்கு குவியும் பாராட்டு
00:46
Video thumbnail
ஜான்சியில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த கார்களை வேகமாக வந்து முட்டித் தள்ளிய லாரி
00:31
Video thumbnail
மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
00:55
Video thumbnail
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜர்
00:30
Video thumbnail
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்
01:09
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img