spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – 3 பேர் கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – 3 பேர் கைது

திருப்பத்தூர் வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பீகாரை சேர்ந்த 3 பேர் கைது செய்தனர்.

திருப்பத்தூரை சேர்ந்த வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பீகாரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - 3 பேர் கைது

திருப்பத்தூரை சேர்ந்தவர் மோனிஷ் (வயது 19). இவரது செல்போனுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில்  பீகார் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாகவும், அதற்கான தங்கள் கல்வி சான்றிதழை அனுப்பி வைக்கவும் என குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதை நம்பிய மோனிஷ் அவர்கள் கேட்ட சான்றிதழ்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உள்ளார். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் மோனிசை தொடர்பு கொண்டு தங்களுக்கு வேலை உறுதியாகிவிட்டது. அதற்காக நாங்கள் கொடுக்கும் வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட பணத்தை அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதற்கு மோனிசும் சம்மதித்து உடனே அவர்கள் அனுப்பி வங்கி கணக்கிற்கு ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 583 ரூபாய் அனுப்பி உள்ளார். இதையடுத்து அவர்கள் ஓரிரு நாட்களில் உங்கள் முகவரிக்கு பணியானை வந்துவிடும், அதன் பிறகு நேரில் வந்து வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - 3 பேர் கைது

ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் எந்த  பணியானையும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோனிஷ் இதுகுறித்து திருப்பத்தூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், பீகார் மாநிலத்தை சேர்ந்த  முகேஷ்குமார், ஜித்தேந்திர குமார், அமன்குமார் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

https://www.mugavari.in/tamilnadu-weather-report-3/

இவர்கள் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு ஜார்கண்ட் மாநிலம் ஆசாரிபாத் மாவட்டம், கோரா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி திருப்பத்தூர் சைபர் க்ரைம் போலீசார் ஜார்கண்ட் மாநிலம் சென்று சிறையில் உள்ள மூன்று பேரையும் மேல் விசாரணைக்காக திருப்பத்தூர் அழைத்து வந்தனர்.

மேலும் இவர்கள் வேலூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் போலீசார் விசாரணை செய்து இரு நாட்களுக்குள் மீண்டும் ஜார்க்கண்ட் மாநில சிறையில் ஒப்படைக்க போவதாக  போலீசார் கூறினர்.

Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
Video thumbnail
8200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
00:24
Video thumbnail
சென்னை தரமணி- வேளச்சேரி ரோடு மடிப்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து
01:48
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
Video thumbnail
கலைஞர் எனும் மானமுள்ள சுயமரியாதைக்காரர் | சரித்தரத்திற்கு சொந்தக்காரர் | Kalaignar Karunanidhi
18:55
Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img