spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் மழைக்கு வாய்ப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழகத்தில் வருகிற 07ம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 05.04.2024 மற்றும் 06.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 07.04.2024: கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 08.04.2024: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 09.04.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10.04.2024 மற்றும் 11.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Video thumbnail
இனி நல்லதே நடக்கும் - பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பின் அன்புமணி பேட்டி
00:34
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஹன்சிகா வழிபாடு
01:39
Video thumbnail
பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார் அன்புமணி..
02:14
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு இல்லை.. - அமைச்சர் ரமேஷ்
01:34
Video thumbnail
"திரும்பவும் ரஜினி சாருடன் படம்.. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த கமல் சாருக்கு நன்றி”- நடிகை சிம்ரன்
01:34
Video thumbnail
40 வருஷத்துக்கு முன்ன நாங்க எடுத்த முடிவு.. ரஜினி குறித்து மேடையில் சொன்ன கமல்
02:03
Video thumbnail
பணி நியமன ஆணை பெற்றவர்களுடன் அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்.!
01:16
Video thumbnail
"கமல் செஞ்ச உதவிக்கு.." ரஜினி சொன்ன உண்மை நிகழ்வு..
02:03
Video thumbnail
நான் பேசினாலே Problem தான்.. தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு.. THALAIVAR173 Rajinikanth
00:59
Video thumbnail
தான் முதல்வர் என்பதையே மறந்த விஜய்...
02:16
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img