விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் சேமநல நிதியில் கையாடல் நடந்திருப்பதாக புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் நகராட்சிகளின் வேலூர் மண்டல நிர்வாக இயக்குனர் லட்சுமி தலைமையில் தணிக்கைத்துறை அலுவலர்கள், கடந்த 2 நாட்களாக விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் முக்கிய கோப்புகள், ஆவணங்களை ஆய்வு செய்தனர்
ஆய்வில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை நகராட்சி ஊழியர்களின் பிற்கால குடும்ப சேமநல நிதியில் ரூ.8 கோடியே 1 லட்சத்து 38 ஆயிரத்து 245- ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், இந்த பணத்தை விழுப்புரம் வி.மருதூர் சந்தானகோபாலபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் வினித் (வயது 24) என்பவர் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து விழுப்புரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ராமலிங்கம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பணத்தை கையாடல் செய்ததை வினித் ஒப்புக்கொண்டார்.
யார் இந்த வினித்?
விழுப்புரம் நகராட்சியில் பணிபுரிந்து வரும் குமாரி என்பவரின் வளர்ப்பு மகன் வினித் ஆவார். குமாரியின் மூலமாக வினித், நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார். கணினியில் திறம்பட செயல்பட்ட அவர், நகராட்சி அதிகாரிகளின் நம்பிக்கையை பெற்றார்.
இதன் அடிப்படையில் வினித், நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சேமநல நிதி கணக்குகளில் இருந்து, கடன் தொகை, பகுதி இறுதி தொகை மற்றும் ஓய்வு பெறுவோருக்கு சேமநல நிதியை வழங்க கருவூல பட்டியல் தயார் செய்வதும், சத்துணவு திட்டம் தொடர்பான செலவினங்கள், ஊதியப்பட்டியல் தயார் செய்து கருவூலத்தில் சமர்பித்தல் மற்றும் ஆணையரின் ஊதியப்பட்டியல் தயார் செய்து கருவூலத்தில் சமர்பித்தல் போன்ற பணிகளை செய்து வந்துள்ளார்.
இதன் மூலம் அவர், கருவூல கணக்கில் பராமரிக்கப்படும் பல்வேறு திட்ட கணக்குகள், பல்வேறு பெயர்களில் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு எவ்வித செலுத்தும் சீட்டு மற்றும் பதிவேடுகளில் ஆணையரின் கையொப்பம் பெறப்படாமல் நகராட்சிக்கு தொடர்பு இல்லாத வங்கிகளின் கணக்குகளுக்கு முறைகேடாக பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.
இவ்வாறாக அவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை, தான் நடத்தி வரும் ஐ.ஏ.எஸ். அகாடமி, நீட் பயிற்சி மையம் உள்ளிட்ட நிறுவனங்களின் வங்கி கணக்குகள் மற்றும் தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் வங்கி கணக்குகளுக்கும் என ரூ.8 கோடியே 1 லட்சத்து 38 ஆயிரத்து 245-ஐ பரிமாற்றம் செய்து அந்த தொகையை எடுத்து கையாடல் செய்துள்ளார்.
இவருக்கு உடந்தையாக விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த வளர்மதி, விழுப்புரம் அருகே பனங்குப்பத்தை சேர்ந்த அஜித்குமார் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதையடுத்து வினித், வளர்மதி, அஜித்குமார் ஆகிய 3 பேர் மீதும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினித்தை கைது செய்தனர்.
பின்னர் வினித், கையாடல் செய்த பணத்தின் மூலம் வாங்கிய 3 சொகுசு கார்கள், ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றையும் மற்றும் நிலம், சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வினித்தை போலீசார், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…