கோட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி இருந்தால் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரைக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் இந்த படம் உருவாகி இருந்தது. படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் மிரட்டி இருந்தார்.
விஜய் தவிர பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மைக் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
அந்த வகையில் கிட்டத்தட்ட 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
ஆனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏனென்றால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் வெங்கட் பிரபு, கோட் படத்தின் டைரக்டர் கட் 3.30 மணி நேரங்களுக்கும் அதிகமாக இருக்கும் எனவும் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடி தளத்தில் நீட்டிக்கப்பட்ட பதிப்பில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனால் ரசிகர்கள் பலரும் கோட் படத்தின் ஓடிடி வருகைக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர்.ஆனால் இந்த படம் தற்போது ஓடிடியில் தியேட்டர் பதிப்பில் மட்டுமே வெளியாகி இருப்பதால் இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
இது தொடர்பாக வெங்கட் பிரபு, டைரக்டர் கட்-க்கான விஎப்எக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் தயாரிப்பாளர்களுடன் இது குறித்து கலந்துரையாடி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆகையினால் இது நீக்கப்பட்ட காட்சிகளாகவோ அல்லது நீட்டிக்கப்பட்ட பதிப்பிலோ வெளியிட இருப்பதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…