இயக்குனரான சூர்யாவின் மகள். இரண்டு விருதுகளை பெற்ற ஆவணப்படம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இயக்குனரான சூர்யாவின் மகள். இரண்டு விருதுகளை பெற்ற ஆவணப்படம்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 14 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

அடுத்தது நடிகர் சூர்யா தனது 44 வது திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகாவும் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்த வருகிறார்.

இவ்வாறு நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் சூர்யா- ஜோதிகாவிற்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இருவரின் படிப்பிற்காக மும்பையில் செட்டில் ஆகி இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜோதிகா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சூர்யா – ஜோதிகாவின் மகள் தியா இயக்குனராக உருவெடுத்துள்ளார். அதாவது ‘LEADING LIGHT – The Untold stories of Women Behind the scenes’ என்ற ஆவண படத்தை இயக்கியிருந்த நிலையில் அந்த படம் Triloka International Film Awards -ல் திரையிடப்பட்டது. பலரது பாராட்டுகளைப் பெற்ற இந்த ஆவணப்படம் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் மற்றும் சிறந்த மாணவர் குறும்படம் ஆகிய பிரிவுகளின் கீழ் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

இதனை சூர்யா – ஜோதிகா ஆகிய இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளனர்.

Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img