கைதி 2 படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாக்கி இருந்த இந்த படத்தில் நடிகர் கார்த்தி வித்தியாசமான பரிமாணத்தில் நடித்திருந்தார்.
சாம் சி எஸ் – இன் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் தந்தது. இவ்வாறு பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளைப் பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.லோகேஷ் கனகராஜின் எல் சி யு கான்செப்டில் உருவாகி இருந்த இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
ஏனென்றால் கைதி படத்தை தொடர்ந்து விக்ரம், லியோ போன்றவை எல் சி யு வில் அடங்கும். அதேசமயம் விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சூர்யா வில்லனாக மிரட்டி இருந்தார். ஆகையினால் கைதி 2 திரைப்படத்தில் கார்த்தி மற்றும் சூர்யா மோதும் காட்சிகள் இடம் பெறும் இன்றைய எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் கைதி 2 திரைப்படத்தில் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாக நடிகர் கார்த்தி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தின் பிரீ ப்ரோடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையினால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…