ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கியிருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதே சமயம் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு 73 வயதிலும் பிஸியாக நடித்து வரும் ரஜினி திடீரென நேற்று (செப்டம்பர் 30) இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது முதுகு வலி, அடி வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகள் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை 6 மணி முதல் மருத்துவர்கள் சிலர் ரஜினியை கண்காணித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ரஜினியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அவரது குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…