சேலம் அருகே பனமரத்துப்பட்டி அடுத்துள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சென்னன். இவர் தனது மகள் சுதா (38), பேரன் விஷ்ணு(12) ஆகியோருடன் சமயபுரம் கோவிலுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மல்லூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
மல்லூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னன் வாகனத்தின் மீது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சென்னன், அவரது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் மல்லூர் போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநர் சுந்தரராஜனை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…