சினிமா

பிரபல நடிகையுடன் லிவ்-இன் உறவில் சிம்பு…! உண்மையா? வதந்தியா?

டிகர் சிம்பு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் சிம்பு சிறுவயதிலிருந்தே சினிமாவில் ஆர்வம் உடைய இவர் தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்து வந்தார். இருப்பினும் பின்னர் பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் சிம்பு ஒரு சில காரணங்களால் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அது மட்டும் இல்லாமல் உடல் எடை அதிகமாகி அவருடைய தோற்றமே மாறிப் போய் இருந்தது. அதன் பின்னர் அவர் சினிமா பக்கமே எட்டிக் கூட பார்க்க மாட்டார் என்று சொல்லி வந்த நிலையில் உடல் எடையை குறைத்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

அந்த படத்தில் எனர்ஜியான சிம்புவை மீண்டும் பார்க்க முடிந்தது. அதைத்தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களிலும் நடித்தார். அடுத்ததாக இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48-வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் நடிகர் சிம்பு, கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அந்த படத்தை நடித்தும் முடித்து விட்டார்.

அடுத்ததாக இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் நடிகர் சிம்புவின் திருமணம் குறித்த தகவல் மீண்டும் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதாவது ஏற்கனவே நடிகர் சிம்பு காதலில் விழுந்ததாகவும் அதனால் ஏற்பட்ட தோல்வியினால் தான் அவர் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நயன்தாரா, ஹன்சிகா, வரலட்சுமி சரத்குமார், நிதி அகர்வால் போன்ற நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார் சிம்பு. ஆனால் காலப்போக்கில் இந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்பது தெரிய வந்தது.

ஆனால் தற்போது மீண்டும் அந்த வதந்தி தலைதூக்கி உள்ளது. அதாவது நடிகர் சிம்பு, நடிகை நிதி அகர்வாலுடன் லிவ் – இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறப் போவதாகவும் புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தகவல் உண்மையா? அல்லது வதந்தியா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அதே சமயம் சிம்புவின் தரப்பிலிருந்து இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி