பிரபல நடிகையுடன் லிவ்-இன் உறவில் சிம்பு…! உண்மையா? வதந்தியா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டிகர் சிம்பு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

பிரபல நடிகையுடன் லிவ்-இன் உறவில் சிம்பு...! உண்மையா? வதந்தியா?நடிகர் சிம்பு சிறுவயதிலிருந்தே சினிமாவில் ஆர்வம் உடைய இவர் தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்து வந்தார். இருப்பினும் பின்னர் பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் சிம்பு ஒரு சில காரணங்களால் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அது மட்டும் இல்லாமல் உடல் எடை அதிகமாகி அவருடைய தோற்றமே மாறிப் போய் இருந்தது. அதன் பின்னர் அவர் சினிமா பக்கமே எட்டிக் கூட பார்க்க மாட்டார் என்று சொல்லி வந்த நிலையில் உடல் எடையை குறைத்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

பிரபல நடிகையுடன் லிவ்-இன் உறவில் சிம்பு...! உண்மையா? வதந்தியா?அந்த படத்தில் எனர்ஜியான சிம்புவை மீண்டும் பார்க்க முடிந்தது. அதைத்தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களிலும் நடித்தார். அடுத்ததாக இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48-வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் நடிகர் சிம்பு, கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அந்த படத்தை நடித்தும் முடித்து விட்டார்.

பிரபல நடிகையுடன் லிவ்-இன் உறவில் சிம்பு...! உண்மையா? வதந்தியா?அடுத்ததாக இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் நடிகர் சிம்புவின் திருமணம் குறித்த தகவல் மீண்டும் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதாவது ஏற்கனவே நடிகர் சிம்பு காதலில் விழுந்ததாகவும் அதனால் ஏற்பட்ட தோல்வியினால் தான் அவர் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நயன்தாரா, ஹன்சிகா, வரலட்சுமி சரத்குமார், நிதி அகர்வால் போன்ற நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார் சிம்பு. ஆனால் காலப்போக்கில் இந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்பது தெரிய வந்தது.

ஆனால் தற்போது மீண்டும் அந்த வதந்தி தலைதூக்கி உள்ளது. அதாவது நடிகர் சிம்பு, நடிகை நிதி அகர்வாலுடன் லிவ் – இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறப் போவதாகவும் புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தகவல் உண்மையா? அல்லது வதந்தியா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அதே சமயம் சிம்புவின் தரப்பிலிருந்து இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img