சினிமா

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் அப்டேட் !

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவாகியள்ளாா். அடுத்தடுத்து இவரது நடிப்பில் வெளியான டான், டாக்டர் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது.

சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பலரதுபாராட்டுகளை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி இருக்கிறாா் சிவகார்த்திகேயன். அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் நலையில். நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்திற்கு பின்னர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23 வது திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை முடித்த பின்னர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருப்பதை சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார்

மேலும் விரைவில் இந்த படம் நடக்கும் எனவும் இந்த படமானது என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். சிபி சக்கரவர்த்தி, சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படமானது சிவகார்த்திகேயனின் 24 வது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி