செய்திகள்

திருநின்றவூரில் மழை நீரில் மூழ்கிய 2000 வீடுகளை பார்வையிட்ட துணை முதல்வர் – நேரில் ஆறுதல்.

திருநின்றவூரில் மழை நின்றாலும் துயரங்கள் போகவில்லை; 2000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை துணை முதல்வர் உதயநிதி நேரில் பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சி, 14, 15, 16, 17 வது வார்டுகளில் உள்ள பெரியார் நகர், முத்தமிழ் நகர், கன்னிகாபுரம் மற்றும் சுதேசி நகரில் 2500 வீடுகள் உள்ளன. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் மழையால் திருநின்றவூர் ஈசா ஏரி நிரம்பி குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது உருவான மிக்ஜாம் புயலால், டிச. 4, 5 தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 57 செ.மீ., மழை பெய்தது. இதன் காரணமாக மேற்கூறிய குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து, முட்டிவரை தண்ணீர் தேங்கி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ராட்சத மோட்டார்கள் வாயிலாக, தண்ணீரை வெளியேற்ற வழிவகை செய்தனர்.

அதேபோல், திருநின்றவூர் நகராட்சி, 21, 27 வார்டில் இந்திரா நகரில் 2000 வீடுகள் உள்ளன. இந்த பகுதியும் ஒவ்வொரு மழைக்கும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு குடியிருப்பை சுற்றி 5 அடிக்கு மேல் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் அன்னை இந்திரா நகர் மற்றும் மேற்கூறிய பகுதியில் குடியிருப்பைச் சுற்றி தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இந்திரா நகரில் மட்டும் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம், அனெக்ஸ் 3, 7 ல் பகுதிகளில் ‘பொக்லைன்’ இயந்திரம் வாயிலாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். திருநின்றவூர் நகராட்சியை பொறுத்தவரை பல மாதங்களாக நிரந்தர நகராட்சி கமிஷனர் மற்றும் போதிய அதிகாரிகள் இல்லாததால், மழை வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இன்னும் துவங்கவில்லை என வார்டு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த ஆண்டு திருநின்றவூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் உள்ள மழைநீர் வடிகால் மட்டும் 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இதை தவிர, மழைக்காலத்தில் குடியிருப்புகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திரா நகரில் 1866 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் மற்றும் இந்திரா நகர் முதல் நெமிலிச்சேரி கால்வாய் வரை 926 மீட்டர் நீளத்திற்கு அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கைகள் அனுமதி பெற அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் துவங்காததால், இந்த மழைக்கும் திருநின்றவூர் நகராட்சி பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலையில் திடீரென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருநின்றவூர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணியை பார்வையிட்டார். பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இது குறித்து வார்டு உறுப்பினர் ஒருவர் கூறுகையில். மற்ற உள்ளாட்சி பகுதிகளில், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருநின்றவூர் நகராட்சியில், நிரந்தர அதிகாரிகள் இல்லாததால் பணிகள் திட்டமிடுவது மற்றும் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 835 ஏக்கர் கொண்ட திருநின்றவூர் ஈசா எரியும் 70 ஆண்டுகளாக தூர் வாராமல் உள்ளன.இதனால் சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி