செய்திகள்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் – சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டிகள்.

தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து இரண்டாம் ஆண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி வரும் 5ம் தேதி சென்னை கோடூர்புரத்தில்  உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட  உள்ளது. இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிகள் குறித்தான செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யமிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் இயக்குனர் ஸ்ரீநாத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளா்  ஜெ.மேகநாத் ரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ளும் 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நவம்பர் 5 முதல் 11 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு சென்னையில் நடந்த போட்டி மிகப்பெரிய வெற்றியை தந்தது. கிராண்ட் மாஸ்டர் மற்றும் கேண்டிடேட் என இருப்பரிவுகளில் நடத்தப்படும் போட்டியில் மொத்த பரிசு தொகையாக 70 லட்சம் வழங்கப்பட உள்ளது . அதில் கிரேண்ட் மாஸ்டர் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு 15 லட்சமும், கேண்டிடேட் போட்டியில் முதல் பரிசு பெறுபவருக்கு 6 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளது, வரும் 4ஆம் தேதி போட்டிக்கான தொடக்க விழா நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

அதனைத் தொடர்ந்து பேசிய சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் இயக்குனர் ஸ்ரீநாத், சென்னையில் கடந்தாண்டு லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் வெற்றி பெற்றதால் தான், குகேஷ் கேண்டிடேட் சாம்பியன்ஷிப் செல்ல உதவியது. தற்போது இந்தியாவின் அர்ஜூன் எரிகேசி உலக செஸ் தரவரிசை பட்டியலில் முன்னேறி வருகிறார். நடைபெறவுள்ள சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியை அவர் வென்றால், அவரால் கேண்டிடேட் சாம்பியன்ஷிப் செல்ல முடியும்.

இப்போட்டி 7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் (Round Robin) முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் நடைபெறவுள்ளது. சென்னை கிராண்ட்மாஸ்டர் சேலஞ்சர்ஸ் போட்டியும், மாஸ்டர்ஸ் போட்டியும் ஒரே நேரத்தில் நடத்தப்பட உள்ளதாகவும், இப்போட்டியில் 8 இந்திய மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி, வி. பிரணவ் , எம். பிரனேஷ் மற்றும் ஆர் .வைஷாலி கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

தொடர்ந்து பேசிய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, எனக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு, செஸ் போட்டிகளில் சென்னை மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இன்றும் வெளிநாட்டு வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். சென்னை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக வந்து கொண்டு உள்ளது. வெளியே போய் சென்று விளையாடாமல் சென்னையில் ஆடுவது மிகப்பெரிய மகிழ்ச்சி என தெரிவித்துள்ளாா்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 1000 பேர் அமர்ந்து பார்க்கும்படி உள்ள கூட்டரங்கில் போட்டி நடைபெறவுள்ளது. இதில் 500 இருக்கைகள் பல செஸ் பயிற்சி மையங்களில் இருந்து வருங்கால வீரர்கள் வருவார்கள். மீதமுள்ள 500 இருக்கைகளில் மக்கள் அமர்ந்து போட்டியை பார்க்கலாமெனவும், அதிகளவு கூட்டத்தை தவிர்க்க அதிகபட்சமாக ரூ.100 கட்டணமாக வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளாா்

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி