வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக லட்ச கணக்கானோர் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வரும் காட்சியை நாம் ரயில் நிலையங்களில் கண்டிருப்போம். தங்கள் சொந்த மாநிலங்களில் பிழைக்க வழியில்லாமல் ரயில்களில் டிக்கெட் கூட எடுக்காமல் கூட்டம் கூட்டமாக வருவது இன்றளவும் இருந்து வருகிறது.இந்நிலையில் புலம்பெயர்ந்து வந்த வட மாநிலத் தொழிலாளிகள் சந்திக்கும் அவல நிலையை வெளிப்படுத்தும் மேலும் ஒரு சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
கடந்த மாதம் பத்தாம் தேதி மேற்கு வங்கத்திலிருந்து 11 விவசாயக்கூலிகள் ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர். ஒப்பந்ததாரர் மூலமாக பொன்னேரியில் விவசாயக் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மூன்று நாட்களாக காத்திருந்துள்ளனர். காத்திருந்தும் இவர்களுக்கு வேலை கிடைக்காததால் மீண்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூலம் சொந்த ஊருக்கு செல்வதற்கு சென்றுள்ளனர்.
கையில் காசு இல்லாமல் டிக்கெட் கூட எடுக்காமல் ரயிலில் வந்த வடமாநில விவசாயக் கூலிகள் சம்பாதித்து சாப்பிடலாம் என நினைத்தவர்களுக்கு வேலை கிடைக்காமல் ஒருவேளை உணவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பசியின் கொடூரத்தில் சொந்த மாநிலத்திற்கு மீண்டும் செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்து காத்திருந்து ஐந்து விவசாயக் தொழிலாளிகள் மயக்கமடைந்து விழுந்துள்ளனர்.
கடந்த 16ஆம் தேதி மயங்கி விழுந்த ஐந்து பேரையும் மற்ற விவசாயக் கூலிகளையும் ரயில்வே போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் ரயில் நிலையத்தில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு ,அதன் பின் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக போலீசார் மேற்கு வங்க போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். வேலைக்காக தமிழகத்திற்கு வந்து பசியில் சிக்கிக் கொண்டவர்கள் தொடர்பாக மேற்கு வங்க கவர்னர் ஆனந்த் போஸ்க்கு தகவல் சென்றது. அவரது சட்ட ஆலோசகர் மூலமாக கூலிகளுக்கு உதவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் சட்ட ஆலோசகரின் தந்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி சசிதரன் கவனத்திற்கு சென்றது. ஓய்வுப்பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான சசிதரன் விவசாயக் கூலிகள் ஒவ்வொருவருக்கும் பண உதவி அளித்து சொந்த மாநிலம் திரும்ப நேரடியாக வந்து உதவி செய்துள்ளார். அந்த வகையில் பசி கொடுமையில் இருந்து மீண்ட விவசாயக் கூலிகள் 10 பேர் சொந்த மாநிலம் சென்றடைந்தனர்.
அதில் சமர்கான் என்ற 35 வயது விவசாய தொழிலாளி மட்டும் பசியின் கொடுமை காரணமாக ,பசி தாங்க முடியாமல் பச்சையாக மீனை தின்று பசியாற முயற்சித்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமடைந்துள்ளது. தொடர்ந்து உடல் உறுப்புகள் செயலிழந்து மூளைக் காய்ச்சலால் விவசாயக் கூலியான சமீர்கான் உயிரிழந்து உள்ளார். சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவார் என இரண்டு குழந்தைகளுடன் காத்திருந்து சமர்கான் மனைவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பசியின் கொடுமையால் உயிரிழந்த சமர்கான் உடலை மீண்டும் சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கு வந்த உறவினர் கிஷோர் காசில்லாமல் சென்னையில் அவதியுற்றுள்ளார்.வேலைக்கு அழைத்து வந்த ஒப்பந்ததாரர் பற்றி எதுவும் தெரியாமல், யாரிடம் உதவி கேட்பது என்று ஆதரவின்றி தவித்து வந்துள்ளார்.
அயோத்தி பட பாணியில் இறந்த உடலை கையில் வைத்துக் கொண்டு தவித்த விவசாய தொழிலாளி சமர்கான் உறவினர் கிஷோருக்கு, உடலை சொந்த மாநிலம் எடுத்து செல்வதற்கு உதவுமாறு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இஸ்ரேல் ஜெபசிங் உதவியை நாடியுள்ளனர் . ஏற்கனவே மேற்கு வங்கத்தில் அதிகாரியாக பணிபுரிந்த காரணத்தினால் தன் சொந்த செலவில் விவசாய கூலி சமர்கான் உடலை விமானம் மூலம் அனுப்ப உதவியுள்ளார்.
மற்றவர்கள் சாப்பிட விவசாயத்தில் வேலை பார்க்கும் விவசாய கூலிகள் பசியால் மயங்கி உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…