spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மேற்குவங்க தொழிலாளி பசியில் பச்சை மீனை தின்று உயிரிழப்பு; உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவிக்கு ஏங்கிய அவலம்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மேற்குவங்க தொழிலாளி பசியில் பச்சை மீனை தின்று உயிரிழப்பு; உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவிக்கு ஏங்கிய அவலம்.வடமாநிலத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி  பச்சை மீனை தின்று சென்னையில் உயிரழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக லட்ச கணக்கானோர் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வரும் காட்சியை நாம் ரயில் நிலையங்களில் கண்டிருப்போம். தங்கள் சொந்த மாநிலங்களில் பிழைக்க வழியில்லாமல் ரயில்களில் டிக்கெட் கூட எடுக்காமல் கூட்டம் கூட்டமாக வருவது இன்றளவும் இருந்து வருகிறது.இந்நிலையில் புலம்பெயர்ந்து வந்த வட மாநிலத் தொழிலாளிகள் சந்திக்கும் அவல நிலையை வெளிப்படுத்தும் மேலும் ஒரு சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

கடந்த மாதம் பத்தாம் தேதி மேற்கு வங்கத்திலிருந்து 11 விவசாயக்கூலிகள் ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர். ஒப்பந்ததாரர் மூலமாக பொன்னேரியில் விவசாயக் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மூன்று நாட்களாக காத்திருந்துள்ளனர். காத்திருந்தும் இவர்களுக்கு வேலை கிடைக்காததால் மீண்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூலம் சொந்த ஊருக்கு செல்வதற்கு சென்றுள்ளனர்.

கையில் காசு இல்லாமல் டிக்கெட் கூட எடுக்காமல் ரயிலில் வந்த வடமாநில விவசாயக் கூலிகள் சம்பாதித்து சாப்பிடலாம் என நினைத்தவர்களுக்கு வேலை கிடைக்காமல் ஒருவேளை உணவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பசியின் கொடூரத்தில் சொந்த மாநிலத்திற்கு மீண்டும் செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்து காத்திருந்து ஐந்து விவசாயக் தொழிலாளிகள் மயக்கமடைந்து விழுந்துள்ளனர்.
கடந்த 16ஆம் தேதி மயங்கி விழுந்த ஐந்து பேரையும் மற்ற விவசாயக் கூலிகளையும் ரயில்வே போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் ரயில் நிலையத்தில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு ,அதன் பின் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக போலீசார் மேற்கு வங்க போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். வேலைக்காக தமிழகத்திற்கு வந்து பசியில் சிக்கிக் கொண்டவர்கள் தொடர்பாக மேற்கு வங்க கவர்னர் ஆனந்த் போஸ்க்கு தகவல் சென்றது. அவரது சட்ட ஆலோசகர் மூலமாக கூலிகளுக்கு உதவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் சட்ட ஆலோசகரின் தந்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி சசிதரன் கவனத்திற்கு சென்றது. ஓய்வுப்பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான சசிதரன் விவசாயக் கூலிகள் ஒவ்வொருவருக்கும் பண உதவி அளித்து சொந்த மாநிலம் திரும்ப நேரடியாக வந்து உதவி செய்துள்ளார். அந்த வகையில் பசி கொடுமையில் இருந்து மீண்ட விவசாயக் கூலிகள் 10 பேர் சொந்த மாநிலம் சென்றடைந்தனர்.

அதில் சமர்கான் என்ற 35 வயது விவசாய தொழிலாளி மட்டும் பசியின் கொடுமை காரணமாக ,பசி தாங்க முடியாமல் பச்சையாக மீனை தின்று பசியாற முயற்சித்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமடைந்துள்ளது. தொடர்ந்து உடல் உறுப்புகள் செயலிழந்து மூளைக் காய்ச்சலால் விவசாயக் கூலியான சமீர்கான் உயிரிழந்து உள்ளார். சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவார் என இரண்டு குழந்தைகளுடன் காத்திருந்து சமர்கான் மனைவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசியின் கொடுமையால் உயிரிழந்த சமர்கான் உடலை மீண்டும் சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கு வந்த உறவினர் கிஷோர் காசில்லாமல் சென்னையில் அவதியுற்றுள்ளார்.வேலைக்கு அழைத்து வந்த ஒப்பந்ததாரர் பற்றி எதுவும் தெரியாமல், யாரிடம் உதவி கேட்பது என்று ஆதரவின்றி தவித்து வந்துள்ளார்.

அயோத்தி பட பாணியில் இறந்த உடலை கையில் வைத்துக் கொண்டு தவித்த விவசாய தொழிலாளி சமர்கான் உறவினர் கிஷோருக்கு, உடலை சொந்த மாநிலம் எடுத்து செல்வதற்கு உதவுமாறு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இஸ்ரேல் ஜெபசிங் உதவியை நாடியுள்ளனர் . ஏற்கனவே மேற்கு வங்கத்தில் அதிகாரியாக பணிபுரிந்த காரணத்தினால் தன் சொந்த செலவில் விவசாய கூலி சமர்கான் உடலை விமானம் மூலம் அனுப்ப உதவியுள்ளார்.

மற்றவர்கள் சாப்பிட விவசாயத்தில் வேலை பார்க்கும் விவசாய கூலிகள் பசியால் மயங்கி உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img