அடுத்தது சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். இதற்கிடையில் இவர் ஸ்டோன் பெஞ்ச் என்ற நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்நேக்ஸ் & லேடர்ஸ் (Snakes & Ladders) என்ற வெப் தொடரை தயாரித்திருக்கிறார். இந்த வெப் தொடரில் நந்தா, நவீன் சந்திரா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீஜித் ரவி, சம்ரித் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
அசோக் வீரப்பன், பரத் முரளிதரன், கமலா ஆல்கமிஸ் ஆகியோர் இணைந்து இதனை இயக்கியிருக்கின்றனர். பிரித்வி சந்திரசேகர் இதற்கு இசையமைத்திருக்கும் நிலையில் விக்னேஷ் ராஜ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். திரில்லர் கதை களத்தில் உருவாக்கி இருக்கும் இந்த வெப் தொடர் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த வெப் தொடரின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் சில சிறுவர்கள் டாலர் ஒன்றை கண்டெடுக்கின்றனர். அந்த டாலரை தேடி ஒரு கும்பல் அலைகிறது. அந்த டாலரில் என்ன இருக்கிறது? எதற்காக அந்த டாலரை பலரும் தேடுகிறார்கள்? என்பதுதான் இந்த வெப் தொடரின் கதை போல் தெரிகிறது. இந்த வெப் தொடர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…