ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு அலைமோதும் மக்கள் கூட்டம்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு அலைமோதும் மக்கள் கூட்டம்.
கோயம்பேடு சந்தைக்கு ஆயுத பூஜை பொருட்கள் வாங்க படையெடுக்கும் மக்கள் மகிழ்ச்சியா? விரக்தியா?
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை கொண்டாடுவதற்கு பூஜைக்கு தேவையான பொருட்களை கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

சென்னை கோயம்பேடு சந்தையில் பூஜைக்கு தேவையான பூ, பழங்கள், வாழை இலை, வாழை கன்று, வெண் பூசணி, தென்னை தோரணம், மஞ்சள் கிழங்கு, காய்கறிகள், பொரி, அவல், கடலை, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் விலை குறைவாக இருக்கும் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கோயம்பேடுக்கு வந்து பூஜை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

பூக்களை பொறுத்தவரை பண்டிகை காலம் என்பதால் வரத்து சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக, 1 கிலோ மல்லி விலை 750-900 ரூபாய் வரையிலும், 1 கிலோ சாமந்தி பூ 150-240 ரூபாய் வரையிலும், 1 கிலோ சாக்லேட் ரோஜா 300-320 ரூபாய் வரையிலும், 1 கிலோ பன்னீர் ரோஸ் 150-180 ரூபாய் வரையிலும், 1 கிலோ முல்லைப்பூ 400-450 ரூபாய் வரையிலும், 1 கிலோ ஜாதிப்பூ 160-400 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

மனைவியை அடித்து கொலை ; அப்பாவி போல நாடகமாடிய கணவன் கைது.

இதே போல பழங்களை பொறுத்தவரை சாத்துகுடி கிலோ 60 ரூபாயில் இருந்து 70 வரைக்கும், ஆப்பிள் கிலோ 70 ரூபாயில் இருந்து 150 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பைனப்பிள் கிலோ 67 ரூபாய்க்கும், திராட்சை கிலோ 35 ரூபாயில் இருந்து 40 க்கும், ஆரஞ்சு கிலோ 35 ரூபாயிலிருந்து 50 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மொத்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் சில பொருட்களின் விலை அதிகரித்திருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். பூஜை பொருட்கள் வரத்து அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில் மழை பெய்து இருப்பதால் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை நடைபெறவில்லை என்றும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

 

Video thumbnail
அதிமுக கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றுதான்
00:57
Video thumbnail
திருமாவளவன் பிறந்த நாள் | ராப் இசைப் பாடகர் வேடனுக்கு அழைப்பு
01:01
Video thumbnail
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பாஜகவின் உட்பிரிவாக மாறிவிட்டது
00:56
Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img