spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

திருப்பதி லட்டின் விவகாரத்தை அரசியலாக்கினால் பெருமாள் மன்னிக்கமாட்டார்- பீட்டர் அல்போன்ஸ்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திருப்பதி லட்டின் விவகாரத்தை அரசியலாக்கினால் பெருமாள் மன்னிக்கமாட்டார்- பீட்டர் அல்போன்ஸ்திருப்பதி லட்டின் விவகாரத்தை மதவாத அரசியலுக்கு சாதகமாக ஈடுபடுத்தினால் பெருமாளே ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசத்தை காக்கும் நடைப்பயணம் மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது,

இதில் முன்னாள் எம்.பியும், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பிட்டர் அல்போன்ஸ் கலந்துக்கொண்டு காந்தி வேடமிட்ட நபருடன் காந்தியின் மதசார்பற்ற கொள்கைகளை விளக்கும் விதமாக முக்கிய வீதிகள் வழியாக நடைப்பயணம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது:- நாடெங்கும் பாஜக எடுத்துவைத்த பாசிச வகுப்புவாத ஆயுதத்தின் கூர்மை ஓவ்வொரு நாளும் மங்கிவருகிறது, மோடியின் மதசாய அரசியல் சாயம் வெளுத்து மோடியின் பாஜக முகம் வெளியே தெரிய தொடங்கியுள்ளது.

நாடு இனிமே மதவாத பாசிச ஆட்சியை ஏற்றுக்கொள்ளாது, மதசார்பற்ற ஆட்சிதான் நிலையான பொருளாதாரத்திற்கு அழைத்துசெல்லும் என்பதை உணர்ந்துள்ளனர், அண்டை நாடான பாகிஸ்தான் போன்ற மதசார்புடைய நாடுகளின் நிலையே எடுத்து காட்டாக உள்ளது என்றார்.

சனாதனம் என்பதைப்பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை, நாம் புரிந்துகொண்டது ஏற்றத்தாழ்வு அற்ற, சாதி பேதம்மின்றி, உயர்வு தாழ்வு இன்றி அனைத்து பிறப்புகளும் மதிப்பது தான் நமது பண்பு, கோயம்புத்தூரிலே விஸ்வகர்மா சமுகத்தை குலத்தொழிலுடன் சேர்த்து பேசுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது, திருப்பதி லட்டு விஷயத்தில் மதவாத அரசியலுக்கு சாதகமாக ஈடுபடுத்துவதை பெருமாளே ஏற்றுக்கொள்ளமாட்டார், தவறு செய்து இருந்தால் தகுந்த தண்டணை வழங்க காங்கிரஸ் கட்சியும் கேட்டுக்கொள்கிறது என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img