spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

”இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மோடி” – ஈபிஎஸ் விமர்சனம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல. இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.

அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி; தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி - எடப்பாடி பழனிசாமி
01:50
Video thumbnail
ஆந்திரா: ஸ்ரீ வெல்லா அருகே ஆம்னி பேருந்து தீ பற்றி 3 பேர் உயிரிழப்பு
00:44
Video thumbnail
பாஜக தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
00:51
Video thumbnail
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு
00:36
Video thumbnail
நான் எந்த அரசியல் கட்சியும் நடத்தவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
01:07
Video thumbnail
பாமக அவசர நிர்வாக குழு கூடவுள்ளது.. வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளோம் - அருள் பேட்டி
01:04
Video thumbnail
தமிழக மக்களின் நலனுக்காக மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைக்க முழு மனதோடு NDA கூட்டணியில் இணைந்துள்ளேன்
02:00
Video thumbnail
விழுப்புரம்: அரசு பேருந்து நடத்துனர் மீது மது போதையில் தாக்குதல்
00:37
Video thumbnail
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்
00:57
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்
00:36
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img