102 மக்களவை தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு
தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
மேலும் ராஜஸ்தான் – 12, உத்தர பிரதேசம் – 8, மத்திய பிரதேசம் – 6, அசாம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட் – தலா 5, பிஹார் – 4, மேற்கு வங்கம் – 3, அருணாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா – தலா 2, சத்தீஸ்கர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான் நிகோபார், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள் – தலா ஒரு தொகுதி என நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
https://www.mugavari.in/news/tamilnadu-news/tiruvanmiyur-ajith-first-voting/1364
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி திரிபுரா மாநிலம் ராம்நகர் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வாக்களித்தார்.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் தி.மு.க. மகளிர் அணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி தனது வாக்கினை பதிவு செய்தார்.
மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடிகர் கௌதம் கார்த்திக் தனது வாக்கினை செலுத்தினார்.
சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
சென்னையில் நடிகர் பிரபு தனது மனைவியுடன் வந்து வாக்கு செலுத்தினார். வளசரவாக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வாக்குப்பதிவு செய்தார்.
மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்.
இந்த தேர்தலில் நடிகர் அஜித் காலையிலேயே முதல் ஆளாக வந்து வாக்கு செலுத்தினார். நடிகர்கள் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன், யோகி பாபு, என்று ஏராளமான நடிகர்கள் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…