திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பழமையான ரெங்கநாதர் கோயில் திருவிழாவில் 16 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 10 தொகுதிகள்!
இந்த கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் ஏழாவது நாளான இன்று (மார்ச் 23) தேரோட்டம் நடைபெற்றது. சகல அலங்காரத்துடன் ரெங்கநாதரும், ரங்கநாயகி தாயாரும் வீற்றிருக்க, திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர்.
ஆரணி மக்களவைத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் தரணிவேந்தனும் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தார். காந்தி சாலை, அச்சரம்பாக்கம் சாலை, கே.ஆர்.கே. சாலை, சந்நதி தெரு வழியே திருத்தேர் வலம் வந்தது. பல நூறு ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் ஏற்கனவே இருந்த தேர் 16 ஆண்டுகளுக்கு முன்பு சிதலமடைந்தது.
தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!
அதன் பின்னர், இந்து சமய அறநிலையத்துறையின் 63 லட்சம் ரூபாய் நிதியோடும், பக்தர்களின் பங்களிப்போடும் திருத்தேர் செய்யப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வெள்ளோட்டத்தைத் தொடர்ந்து, 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் திருத்தேரோட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.