12 ஆம் வகுப்பு பொது தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத் தேர்வை, தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் 7, 534 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 7,72,360 மாணவர்களும், 8,190 தனித்தேர்வர்கள் என 7. 80 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு பணிகளை கண்காணிப்பதற்காக 1,135 பறக்கும் படையினரும், தேர்வினை கண்காணிக்கும் பணியில் 43 ஆயிரத்து 200 ஆசிரியர்களும் ஈடுப்பட்டனர். சென்னை மாவட்டத்தில் 591 பள்ளிகளை சேர்ந்த 62, 124 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வை எழுதினர்.
மார்ச் 22ம் தேதி பொதுத்தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுக்காப்பு மையங்களில் விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தொடர்ந்து 86 மையங்களில், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 13ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுமையாக முடிவடைந்து, சரிபார்க்கும் பணிகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் முடிவடைந்தது.
இந்த நிலையில் 12 ஆம் பொது தேர்வு ரிசல்டானது www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணைதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. மாணவர்கள் அனைவரும் தங்களது ரிசல்ட்டை ஆர்வமுடன் சரிபார்த்து வருகின்றனர். 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 92.37%ம் அதிகபட்சமாக பெண்கள் 96.44%ம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 35 பேர் தமிழ் பாடத்தில் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டில் 0.53% மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. மேலும் 397 அரசு பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டமானது 97.45% மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதலிடம் வகிக்கிறது. கடைசி மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…