சாலையில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இளைஞரை துரித நடவடிக்கையால் காப்பாற்றிய  போக்குவரத்து காவல் துறையினருக்கு – குவிந்த பாராட்டுக்கள்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசாரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

சாலையில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இளைஞரை துரித நடவடிக்கையால் காப்பாற்றிய  போக்குவரத்து காவல் துறையினருக்கு - குவிந்த பாராட்டுக்கள்

கடந்த 6ஆம் தேதி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில், தலைமைக் காவலர் சுப்பிரமணி காவலர்கள் வேலாயுதம் மற்றும் கங்காதரன் ஆகியோர் துரைப்பாக்கம், ரேடியல் ரோடு சந்திப்பு அருகே வாகனத் தணிக்கை மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது,  சற்று தொலைவில் ஆக்டிவா இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஒருவர் திடீரென தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, நெஞ்சை பிடித்தவாறு வாகனத்துடன் சாலையில் விழுந்தார். இதனைக் கண்ட உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் காவலர்கள் ஓடிச் சென்று அவரை தூக்கியபோது, மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டார். உடனே. உதவி ஆய்வாளர் தனது காவலர்களுடன் சேர்ந்து மேற்படி நபரை தூக்கிக் கொண்டு அருகிலிருந்த மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.

கன்னயகுமரி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் மேலும் – 4 போ் கைது

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ECG பரிசோதனை எடுக்கப்பட்டது. பின்னர் மேற்படி நபரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்க மருத்துவர் அறிவுறுத்தியதன்பேரில், உதவி ஆய்வாளர் மகேந்திரன் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, பாதிக்கப்பட்ட நபரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

 

விசாரணையில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நபர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  முருகன்(32)  என்பதும், சென்னையில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், வேலை காரணமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வரும்போது நெஞ்சுவலி ஏற்பட்டதும் தெரியவந்தது.  மேலும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல், துணை ஆணையாளர் (தெற்கு) திரு.பண்டி கங்காதர்   சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய  துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன், தலைமைக் காவலர் M.சுப்ரமணி காவலர்கள் வேலாயுதம் மற்றும் கங்காதரன்  ஆகியோரை நேற்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img