திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சந்தை பகுதியில் உள்ள காய்கறி கடையில் காய்கறி வாங்கியும், கரும்பு ஜூஸ் போட்டும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் ஆதரவு திரட்டினார்.
தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் மக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான், மக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்து வருகிறார்.
இறைச்சிக் கடைகளில் இறைச்சியை வெட்டியும், மக்கள் கூடும் இடங்களுக்கு சென்றும் ஆதரவு கேட்டு வருகிறார். இந்த நிலையில், வாணியம்பாடியில் உள்ள வாரச்சந்தையில் காய்கறி வியாபாரிகளிடம் காய்கறிகளை விற்பனை செய்தும், காய்கறி வாங்கியும், கரும்பு ஜூஸ் போட்டும் ஆதரவுத் திரட்டினார்.
பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர்- குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!
அப்போது மன்சூர் அலிகானை கண்ட அப்பகுதி மக்கள் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.