சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அ.தி.மு.க.வின் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, சேலம் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷை அறிமுகம் செய்து வைத்ததுடன், கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
16 ஆண்டுகளுக்கு பிறகு ரெங்கநாதர் பிரம்மோற்சவத்தில் இடம் பெற்ற தேரோட்டம்!
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செம்மலை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், எம்.கே.செல்வராஜ், ஓமலூர் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை; கூட்டணி இல்லையென்றாலும் சொந்தக்காலில் நிற்போம். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அ.தி.மு.க. முக்கிய காரணம். அ.தி.மு.க. வென்றால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் கடுமையான ஊழல் நிலவுகிறது.
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 10 தொகுதிகள்!
பா.ஜ.க.வுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் அளித்த ராமதாஸ் தற்போது அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார்; தமிழ்நாட்டில் பா.ம.க. கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை. டெல்லியில் ஊழல் நடந்ததா, இல்லையா எனத் தெரியவில்லை; தவறு நடந்தால் கைது செய்யட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.