உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் ஆலையில் அமோனியா வாயு கசிவு
கோவை மாவட்டம் காரமடை அருகே தனியார் ஆலையில் அம்மோனிய வாயு கசிந்ததால் ஏராளமானோர் மூச்சு திணறலுக்கு ஆளாகினர். ஏற்கனவே மூடப்பட்ட இந்த ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகிறார்கள்.
காரமடை அருகே சிக்காரம் பாளையம் ஊராட்சிகள் செயல்பட்டு வந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது.
கடந்த பல மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்த நிலையில் புதிய உரிமையாளர் இந்த ஆலையை வாங்கி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். வழக்கம் போல நடைபெற்ற பராமரிப்பு பணியின் போது நேற்று மாலை எதிர்பாராத விதமாக ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட்டது.
இதனால் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுவட்டார பகுதிகளில் வசித்த மக்கள் கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதியுற்றனர். இதை எடுத்து கிராம மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேறிய நிலையில் ஆலைக்கு விரைந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தண்ணீரை பீச் அடைத்து அமோனியா வாயு கசிவை கட்டுப்படுத்தினர்.
ஆலையை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து நள்ளிரவில் வெளியேறிய கிராம மக்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆலையில் அம்மோனியா வாயு கசிவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து மீண்டும் தங்கள் வீடுகளுக்கு சென்ற பொதுமக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
https://www.mugavari.in/news/cinema-news/pattas-actress-claims-to-have-frozen-eggs/2328
ஆலையில் மீண்டும் வாயு கசிவு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.