மின் நுகர்வோரிடமிருந்து கூடுதலாக காப்புத்தொகை வசூலிக்க முடிவு – அன்புமணி கண்டனம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மின் நுகர்வோரிடமிருந்து ரூ.15,000 வரை கூடுதல்காப்புத்தொகை வசூலிக்க முடிவு செய்துள்ள திமுக அரசின் மக்கள் விரோத செயலுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு அடுத்த மாதம் முதல் மின்சார நுகர்வோரிடமிருந்து கூடுதல் காப்புத்தொகை (SECURITY DEPOSIT) வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க மின்சார வாரியம் துடிப்பது கண்டிக்கத்தக்கது. அனைத்து நுகர்வோரும் மே மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான ஓராண்டில் பயன்படுத்திய மின் கட்டணத்தில் மாத சராசரி கணக்கிடப்பட்டு, 3 மாதங்களுக்கான தொகை புதிய காப்புத் தொகையாக கணக்கிடப்படும். ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள காப்புத்தொகைக்கும், புதிய காப்புத்தொகைக்கும் இடையிலான கட்டணத்தை கூடுதல் காப்புத்தொகையாக நுகர்வோர் செலுத்த வேண்டும்.

2022-ஆம் ஆண்டு மின்சாரக் கட்டணம் 52% வரை உயர்த்தப்பட்டது. அதனால், அனைத்து வகையான மின் இணைப்புகளுக்கும் மின் கட்டணம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதன்படி பார்த்தால் வீடுகளுக்கான மின் இணைப்புக்கு ரூ.15,000 வரை கூடுதல் காப்புத்தொகை செலுத்த வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தையே செலுத்த முடியாமல் மக்கள் தவிக்கும் நிலையில் கூடுதல் காப்புத்தொகையை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் செலுத்த முடியாது. கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க திமுக அரசு திட்டமிட்டிருந்த நிலையில் பா.ம.க.வின் எதிர்ப்பால் தான் அது கைவிடப்பட்டது. இப்போதும் கூடுதல் காப்புத்தொகை வசூலிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜூலை மாதம் முதல் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 6% வரை உயர்த்தப்படவுள்ளது. அதற்கு முன்பாக கூடுதல் காப்புத்தொகை செலுத்த வேண்டும் என்பது மனிதநேயமற்ற முடிவு ஆகும். மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதன் பின் ஆண்டுக்கு ஒருமுறை மின்சாரக்கட்டணத்தையும், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை காப்புத் தொகையையும் உயர்த்துகிறது. திமுக அரசின் இந்த மக்கள்விரோத செயலுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Video thumbnail
மாறுகிறது களம்..Elon musk கொடுத்த Shock.அடுத்த பிரதமர் ராகுல் காந்தியை சந்திக்க Elon musk திட்டம்
02:44
Video thumbnail
மீண்டும் கில்லி ரிலீஸ்... ரசிகர்கள் கொண்டாட்டம்... | vijay | tvk | rerelease | gilli movie |
08:05
Video thumbnail
EVM மிஷினில் தில்லு முல்லு... வியாசர்பாடியில் சிறிது நேரம் வாக்கு பதிவு நிறுத்தம்... | bjp | tmc |
08:07
Video thumbnail
வாக்கு நம்ம உரிமை - சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan | vote | election | voting rights |
00:55
Video thumbnail
கையில் பிளாஸ்திரியுடன் நடிகர் விஜய்.... | vijay | vote | election | GOAT |
00:12
Video thumbnail
நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், ரஜினி வாக்களிப்பு... | vijay | sivakarthikeyan | rajinikanth |
05:27
Video thumbnail
தி.மு.க- 30, அ.தி.மு.க- 2, பா.ஜ.க- 0, மற்றவை இழுபறி... கரூர், விருதுநகர் வெற்றி - ஈரோடு போட்டி ..
12:20
Video thumbnail
ABP & C Voter's நடத்திய புதிய கருத்து கணிப்பு... பரபரப்பு தகவல்... யாருக்கு வெற்றி ? | bjp | cong |
01:58
Video thumbnail
297 இந்திய கூட்டணிக்கு வாய்ப்பு.வட மாநிலங்களில் புதிய திருப்பம் #modi #congress #rahulgandhi #bjp
08:29
Video thumbnail
கெஜிரிவால் கைது... சர்வதிகாரத்தின் தொடக்கம்.... #modi #bjp #kejiriwal
00:39
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img