அண்ணாமலை, ஆ.ராசா, டி.எம்.செல்வகணபதி, டிடிவி தினகரன் உள்ளிட்ட சிலரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் சலசலப்பு நிலவியது. பின்னர் அவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வேட்பு மனு பரிசீலனையின் போது, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தரப்பில் 2 வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில், ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வேட்பு மனுவின் பிரமாண பத்திரத்தில் ஆவணங்கள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை
என்றும், எண் 27 விண்ணப்பத்தில் வேட்பாளரின் குற்றப்பின்னணி வரிசைப்படுத்தப்படவில்லை எனவும், அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் நலத்துறை உத்தரவு
இதனால் அண்ணாமலையின் வேட்பு மனுவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் வேட்பு மனு பரிசீலனை அறையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளைப் பிழைகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்து, அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்பதாக அறிவித்தார்.