நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் டெல்லியில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதைப் போல் தமிழகத்திலும் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது. எல்லாரும் எதிர்பார்த்த திமுக கூட்டணி 40/40 வெற்றிப் பெற்றது. ஆனால் மத்தியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் முதலமைச்சர் அமெரிக்கா பயணம் செல்கிறார், அதற்கு முன்பு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம், அப்பொழுது இரண்டு மூன்று அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம் என்றும் புதியதாக இரண்டு அமைச்சர்கள் பதவி ஏற்கலாம் என்றும் கூறப்பட்டது. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணமும் தள்ளிப்போனது, அமைச்சரவை மாற்றமும் நடைபெறவில்லை.

தற்போது ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாட்டத்திற்கு பின்னர் ஜூலை 27 ஆம் தேதி முதலமைச்சர் அமெரிக்கா செல்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.

அதற்கு முன்பு அமைச்சரவை மாற்றம் நடைபெற வாய்ப்பு இருக்கிறதா இல்லையா? உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்குமா கிடைக்காதா என்ற பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். அப்போது உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்த போது, அதற்கான காலம் இன்னும் கனிய வில்லை என்று சூசகமாக கூறினார். அப்படியென்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கும் திட்டம் முதலமைச்சரிடம் இல்லை என்பது தெளிவாகி விட்டது.

அமைச்சரவை மாற்றம் நடக்குமா நடக்காதா?

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி இல்லை என்றாலும் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அப்போது

ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாசர், முதல்வர் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆவடி சா.மு.நாசரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

Video thumbnail
SIR திருத்தம் இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி | வேல்முருகன் பேட்டி
06:46
Video thumbnail
இரண்டாவது இடதுக்கு தான், அதிமுக - தவெக இடையே போட்டி
01:14
Video thumbnail
இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் கட்சி திமுக
01:14
Video thumbnail
விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
01:07
Video thumbnail
2026 தமிழ்நாடு தேர்தல் மிக மிக முக்கியமானது | விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
16:39
Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:12
Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img