spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரிட்டன் தமிழ் எம்.பி. நன்றி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ஈழத் தமிழர் வம்சாவளியில் வந்த உமா குமரன் வெற்றி அடைந்தார்.

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழர் வம்சாவளியில் வந்த உமா குமரன், 19 ஆயிரத்து 145 வாக்குகளுன் வெற்றி பெற்றுள்ளார். கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன் ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரிட்டன் தமிழ் எம்.பி. நன்றிஅவருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், “தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்தவர்” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு உமா குமரன், “உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் அன்பையும், ஆதரவையும் வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார்.

பிரிட்டனில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பிரிட்டனின் புதிய பிரதமராக கீர் ஸ்டாமர் பதவியேற்றுள்ளார். இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த 8 பேர் போட்டியிட்ட நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தேர்தலில் ஈழத் தமிழரான உமா குமரன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரிட்டன் தமிழ் எம்.பி. நன்றிஇவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “ஸ்ட்ராட்போர்ட் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினராகவும் பதவியேற்கும் உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ் சமுதாயத்திற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img