மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் வேட்பாளர் செலவினத் தொகையை ரூபாய் 95 லட்சமாக உயர்த்தி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் தமிழிசை திடீர் ராஜினாமா!
“மக்களவைத் தேர்தல் செலவிற்காக தமிழ்நாடு அரசிடம் ரூபாய் 750 கோடி கோரப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுத் தொகை ரூபாய் 70 லட்சத்தில் இருந்து ரூபாய் 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சி-விஜில் செயலி மூலம் 141 புகார்கள் ஒரே நாளில் பெறப்பட்டுள்ளன” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள்- அனைத்து தகவல்களையும் வெளியிட எஸ்பிஐ- க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்டவைக் குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.