கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு உற்சாக வரவேற்பு
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வரலாற்று சாதனை படைத்த திரும்பிய தமிழக இளம் செஸ் வீரர் குகேஷ்க்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று ஒட்டுமொத்த தேசத்தையே வியப்பில் ஆழ்த்தினார். இதை அடுத்து சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்தியச் செஸ் சம்மேலனம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பள்ளி மாணவர்கள் திரண்டு செஸ் வீரர் குகேஷ்க்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செஸ் வீரர் குகேஷ் கேண்டிடேட்ஸ் தொடரில் திடீரென ஏற்பட்ட தோல்வி தம்மை பாதித்த போதும் அதிலிருந்து மீண்டு வந்து சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
https://www.mugavari.in/news/world-news/more-than-100000-affected-by-heavy-rains-in-kenya/1910
உலக சாம்பியன்ஷிப் தொடரில் தாம் மோதவுள்ள சீன வீரர் டிங் லிரனை வெல்ல அனைத்து முயற்சிகளையும் எடுக்க போவதாக குகேஷ் கூறினார்.
தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை கிரான் மாஸ்டர் தொடர் தான் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தமக்கு அளித்ததாக குகேஷ் கூறினார். இதற்காக தமிழ்நாடு அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.