சென்னையில் கடந்த 21 நாட்களில் 109 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை பெருநகரில் கடந்த 21 நாட்களில் 2 பெண்கள் உட்பட 109 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை பெருநகரில் கடந்த 21 நாட்களில் 2 பெண்கள் உட்பட 109 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது. சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 21.04.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 186 குற்றவாளிகள். திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 64 குற்றவாளிகள். கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 101 குற்றவாளிகள், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 17 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 3 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 9 குற்றவாளிகள்.

பெண்களை மானபங்கம்படுத்திய 4 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 387 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் கடந்த 01.04.2024 முதல் 21.04.2024 வரையிலான 21 நாட்களில் 2 பெண்கள் உட்பட 109 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
Video thumbnail
அதிமுக பாஜக கூட்டணியில், தவெக இணைத்தால்?
01:09
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு
01:14
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு | மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் | Eagle
07:22
Video thumbnail
தவெக 23 சதவீதம்.. திமுக 45 சதவீதம்.. புதிய கருத்து கணிப்பு..
01:14
Video thumbnail
TVK 23 Percent | DMK 45 Percent | Opinion Poll | புதிய கருத்து கணிப்பு | தவெக | திமுக | MK Stalin
07:49
Video thumbnail
சிவசேனா போல் திமுகவை உடைப்பதே பிஜேபியின் திட்டம்
01:09
Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:08
Video thumbnail
தவெக-வை தொடங்க சொன்னதே பிஜேபி தான்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள்
01:08
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img