சென்னையில் வழக்கத்தை விட ஆவின் பால் விநியோகம் இரண்டு மணி நேரம் தாமதமானதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன், கடுமையாக அவதியடைந்தனர். குறிப்பாக, சென்னையின் பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், அடையாறு உள்ளிட்டப் பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் தாமதமானது.
பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்!
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆவின் பால் நிறுவனம், தவிர்க்க முடியாத காரணங்களால் பால் விநியோகம் தாமதமானதாகத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அம்பத்தூர் பால் பண்ணையில் ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் போராட்டம் செய்ததால், சென்னையில் ஆவின் பால் விநியோகம் தாமதமாகியுள்ளது. அதிகாலை 04.00 மணிக்கு விநியோகிக்கப்பட வேண்டிய பால் காலை 06.30 மணிக்கு விநியோகப்பட்டுள்ளது.
குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!
ஆவின் ஒப்பந்த வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளுக்கான பணம் ரூபாய் 2 குறைத்து வழங்கியதால் ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவே பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் மாற்று வாகனங்களில் ஆவின் பால் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.