சித்திரை திருவிழா- அழகர் கோவிலில் இருந்து புறப்பட்ட வாகனங்கள்
மதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழாவிற்காக அழகர் கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகரின் தங்க குதிரை வாகனங்கள்.
மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் இருந்து தங்க குதிரை வாகனம், கருட வாகனம், சேச வாகனம் உள்ளிட்டவை மதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழாவிற்காக இன்று கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன.
இந்த வாகனங்கள் அனைத்தும் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் வைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி சித்ரா பௌர்ணமி தினமான வரும் 23ஆம் தேதி காலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 08ஆம் தேதி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியின் போது அழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். அதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி இரவு மதுரை வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலை சென்றடையும் அழகர் மறுநாள் காலை கருட வாகனத்தில் புறப்பாடாகி தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து 24 ஆம் தேதி இரவு மதுரை ராமராயர் மண்டபடியில் கள்ளழகருக்கு தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் 10 அவதாரங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
https://www.mugavari.in/news/tamilnadu-news/bjp-leader-arrested-for-rs-28-crore-fraud/1277
இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான வாகனங்கள் மதுரை அழகர் கோவிலில் இருந்து இன்று பலத்த பாதுகாப்புடன் கோவில் பணியாளர்களால் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…