ரூ.28 கோடி மோசடி – பாஜக பிரமுகர் கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ரூ.28 கோடி மோசடி – பாஜக பிரமுகர் கைது

கும்பகோணத்தில் 600 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த ஹெலிகாப்டர் சகோதரர்களான எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் மீது சென்னையில் உள்ள தங்க நகை கடையில் தங்கம் வாங்கிக் கொண்டு 28 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் அளித்த புகாரினைத் தொடர்ந்து சுவாமிநாதன் கைது. எம்.ஆர்.கணேஷ் தலைமறைவு ஆனார்.

ரூ.28 கோடி மோசடி - பாஜக பிரமுகர் கைது

கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனி தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் சகோதரர்கள். இவர்கள் கும்பகோணத்தில் ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தி கொண்டு ஹெலிகாப்டர் நிறுவனம் நடத்துகிறோம் என்ற பெயரில் பொது மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீடு பெற்று 600கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளனர்.

ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் முதலீடு செய்த நபர்கள் வட்டியும் வரவில்லை முதலும் கிடைக்கவில்லை என பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது இவர்கள் பிணையில் உள்ளனர்.

ரூ.28 கோடி மோசடி - பாஜக பிரமுகர் கைது

இதற்கிடையில் இவர்களின் மீது சென்னையை சேர்ந்த நகைக்கடை நிறுவனம் தங்களிடம் நகைகளை வாங்கிக்கொண்டு 28 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளனர் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் பணம் தராமல் உள்ளனர் என்றும் பாதிக்கப்பட்ட தங்க நகை நிறுவனம் சென்னை காவல் துறையில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று சுவாமி நாதனை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கணேசை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

600 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக கூறப்படும் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் மீது சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கே பணம் கட்டி ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

https://www.mugavari.in/news/politics/defamation-case-filed-against-edappadi-palanisamy/1268

இவர்களிடத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலானோர் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் என்பதால் காவல்துறையில் அவர்கள் புகார் அளிக்கவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்தது இவர்கள் மீதான மோசடி வழக்கு. திடீர் திருப்பமாக தற்போது சென்னை நகைக்கடையில் தங்க காசுகளை வாங்கிக் கொண்டு 28 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video thumbnail
புதிய கூட்டணி | விஜய் சீமான் அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு | திமுக விதைத்ததை அறுவடை செய்யும்
09:49
Video thumbnail
அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்
00:56
Video thumbnail
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் பங்கேற்கவில்லை
00:34
Video thumbnail
மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
00:43
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி அதை செய்வாரா?
00:46
Video thumbnail
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும்
00:43
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி
00:44
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு - ஆளுநர் அழைப்பு | மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
11:51
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி | EPS | ADMK | BJP | Modi | Amit Shah
07:24
Video thumbnail
உயர்கல்வி தரவரிசையில் தமிழ்நாடு நம்பர் 1
00:57
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img